சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
- சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
- சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் கண்டறியப்பட்ட தோடு, அவர்கள் திருடி வைத்திருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறி வதற்கும் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு பெற்று தருவதற்கும், உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கவுரவிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முடிவு செய்தார். அதன்படி பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அக்கறையுடன் செயல்பட்ட 50 பேரை நேரில் வரவழைத்து அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தாமாக முன்வந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூகநோக்கில் சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.