உள்ளூர் செய்திகள்

தமிழக மக்களின் எதிர்ப்பு-போராட்டத்துக்கு கவர்னர் பணிந்துள்ளார்

Published On 2023-04-11 08:52 GMT   |   Update On 2023-04-11 08:52 GMT
  • ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தமிழக மக்களின் எதிர்ப்பு-போராட்டத்துக்கு கவர்னர் பணிந்துள்ளார்.
  • பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரை

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் செயல் திட்டத்தை கவர்னர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைவேற்ற துடிப்பவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அவர் தமிழ்நாடு என் பதை மறுதலித்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் எனப் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி னார். பின்பு வலுவான கண்டனம் எழுந்த பின்னர் குடியரசு தின அழைப்பி தழில் தமிழ்நாடு என்று அச்சிட்டார்.

அதே போல அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த அறிக்கையில் சில வாக்கியங்களை தவிர்த்தும், திரித்தும் வாசித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தையும், தார்மீக நெறிகளையும் மீறினார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பாதிக்கப்பட்ட 60பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

இதற்கு முடிவு கட்டும் வகையில் கடந்த ஆண்டு ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரை நேரில் சந்திந்து மாநில அரசின் தரப்பில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இருந்தபோதிலும் 6மாத காலம் அந்த மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னர் இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்.

இதற்கிடையே குடிமை தேர்வு எழுதும் மாணவர்களி டையே உரையாற்றிய கவர்னர் அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்று தான் அர்த்தம் என்று பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி கவர்னர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News