- செல்போன் பேசியதை கண்டித்ததால் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
- சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை
மதுரை வசந்தநகரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 27). இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பாக காரை நிறுத்தியிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதற்கு கோபிகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்வீசி தாக்கினார்.
இதில் காரின் கண்ணாடி கள் உடைந்து நொறுங்கி யது. இது தொடர்பாக கோபி கிருஷ்ணன், சுப்பிரமணிய புரம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை அனுப்பானடி பகலவன் நகர், பூக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் எல்லீஸ் நகர், போடி லைனில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கம்பெனியின் கேட் முன்பாக போஸ்டரை ஒட்டினார். இதற்கு கண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கல் வீசி தாக்கினார். இதில் கம்பெனியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது தொடர்பாக கண்ணன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும், ஒரே வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் எல்லீஸ் நகர், போடி லைனைச் சேர்ந்த முத்து கருப்பன் என்பவரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.