- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவாக வைகாசி விசாக திருவிழா உள்ளது.ஆண்டுதோறும் வைகாசி மாசம் 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா வருகின்ற 24-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு கோவில் ஓதுவார் பாடல் பாடப் பெற்று சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகம் ஜூன் 2-ந் தேதி நடைபெறும். இதற்காக சண்முக சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி, தெய்வா னையுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார்.
அங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் கொண்டு சுவாமி களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்து பாலா பிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும்.
இதில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கிருந்து இரவு பூ பல்லக்கில் திருப்ப ரங்குன்றம் கோவிலை வந்து அடைவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.