உள்ளூர் செய்திகள்

மேலூரில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசினார்.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம்

Published On 2023-04-20 09:44 GMT   |   Update On 2023-04-20 09:44 GMT
  • மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாசிச கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
  • வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசினார்.

மதுரை

மதுரை மாவட்டம் மேலூரில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

மனிதநேயம் தளைத்தோ ங்க, மத நல்லிணக்கம் செழித்திட, அறம், நெறி தொடர்ந்திட உலகம் முழுவதும் உள்ள இஸ்லா மிய பெருமக்கள் ரமலான் நோன்பை கடைபிடித்து வருகிறார்கள்.

இன்றைய உலகத்தில் இந்திய ஒன்றியம் தான் குடியரசு இந்தியா என்று டாக்டர் அம்பேத்கர் பிரக டனம் செய்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை ஏற்படுத்தினார்கள்.

மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டின் அரசிய லமைப்பு சட்டத்தை செல்லாக் காசாக மாற்ற நினைக்கிறது. அரசியல மைப்பு சட்டத்தை தகர்த்தெ றிய துடிக்கிறது. இந்த பாசிச வாதிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

அமைதி பூங்காவாக திகழும் தமிழ் மண் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வளர்த்த பொதுவுடமை மண்ணாக தமிழ்நாடு பக்குவப்பட்டு உள்ளது. திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச ஆர். எஸ். எஸ். கூட்டம் மத நல்லிண க்கத்தை சீர்குலைக்க விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட நினைக்கிறார்கள். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக மரபுகளுக்கு மாறாக செயல்படும் மத்திய பாஜக அரசை வருகிற பொதுத் தேர்தலில் விரட்டி அடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News