உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அருகில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.

உதயநிதி இப்போது எய்ம்ஸ் பற்றி வாய் திறக்காதது ஏன்?-ராஜன் செல்லப்பா பேச்சு

Published On 2022-12-14 08:30 GMT   |   Update On 2022-12-14 08:30 GMT
  • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • உதயநிதி இப்போது எய்ம்ஸ் பற்றி வாய் திறக்காதது ஏன்? என ஆர்ப்பாடடத்தில் ராஜன் செல்லப்பா பேசினார்.

திருப்பரங்குன்றம்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல.ஏ பேசியதாவது:-

தி.மு.க. அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்தது.தற்போது மின்கட்டணத்தை 53 சதவீதமும், வீட்டு வரியை 100 சதவீதமும் உயர்த்தி விட்டார்கள். பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போதைய விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றனர். அதற்குள் இந்த விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

தற்போது புயல், மழை காரணமாக மக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் முதல்வர் தனது மகனுக்கு அமைச்சர் பதவியேற்பு விழா நடத்துகிறார். தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கூறி செங்கல்லை தூக்கி வாக்கு சேகரித்த உதயநிதி தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வாய் திறக்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடி மராமத்து பணி மூலம் தமிழகமெங்கும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். பொது மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆர்ப்பாட்டத்தில்

இவ்வாறு அவர் பேசினார்.

பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்யன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News