சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- நடைபயணத்தில் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
சோழவந்தான்
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு வரு கிறார். நேற்று மாலை மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கினார். சோழவந்தானில் எம். வி. எம். மருது மஹால் அருகே பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளிமயில் சிவகாமி, தொழிலாளர் அணி ராஜா ராம் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். நடை பய ணத்தின் போது அண்ணா மலை பேசியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பு. அந்த வகையில் சேலத்தை பொருத்தவரை மாம்பழம், மதுரையை பொருத்தவரை மல்லி, காஞ்சியைப் பொறுத்தவரை பட்டு. அதன்படி சோழ வந்தான் ஊருக்கு சிறப்பு வெற்றிலையாகும்.
அந்த வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி.உலகம் முழுவதுமே நீங்கள் வெற்றிலையை ஏற்றுமதி செய்ய இந்த புவிசார் குறியீடு பயன் படும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாங்க ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மட்டுமே 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள்? என தெரிய வில்லை. அலங்கா நல்லூர் சர்க்கரை ஆலை கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இன்னும் திறக்கவில்லை. தி.மு.க. அரசு அதனை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சார்ந்துள்ள பத்திர பதிவு துறையில் ஊழல் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நடைபயணத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ சிம்மன், மாநில ஊடகத்துறை தலைவர் ரங்காஜி, ஓ.பி.சி. அணிமுன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முரளி ராமசாமி, மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொரு ளாளர் முத்துராமன், வாடிப்பட்டி கண்ணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.