- கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார்.
- கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
அரவேனு
நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) மகாசபை கூட்டம் நடைபெற்றது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார். கலைமணி வரவேற்றார். மாநில செயலாளர் கோபி குமார் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் அரசின் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ள உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மக்களுக்கு மானிய விலையில் சிமெண்ட் வழங்க வேண்டும். வாரிய பதிவை எளிமையாக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல அனைத்து சலுகைகளும் உடலுழைப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.