மூக்கனூர் ஊராட்சியில் முறைகேடுகலெக்டரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு
- இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
- இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்.
இது குறித்த விசாரணைக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் சாந்தா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி கணக்கு, வழக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 108 தேங்காய் உடைத்தனர். பின்னர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.