உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2023-03-10 09:31 GMT   |   Update On 2023-03-10 09:31 GMT
  • குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • 200-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் 2 கழிவறைகள் மட்டுமே உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்றார்.

கூட்டத்தில் பள்ளியில் ஆண்டு விழா நடத்துவது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்வது, விளையாட்டு மன்றம் இலக்கிய மன்ற போட்டிகள் நடத்துவது, 200 -க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது.

எனவே பள்ளி குழந்தைகளின் தேவையை கொண்டு கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜவகர் நிஷா முகமது ரபிக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் அகல்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News