ஆறுமுகநேரி சிவன் கோவிலில் மாங்கனி திருவிழா
- காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இரவில் குருபூர்ணிமா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில், தெரிசை அய்யப்பன், தங்கமணி, மோகன், கார்த்திகேயன், மண்டகப்படிதாரரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.