உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா நடைபெற்றது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புகலை பயிற்சி

Published On 2023-05-11 10:00 GMT   |   Update On 2023-05-11 10:00 GMT
  • பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார்.
  • இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் பகுதியைச் சேர்ந்த கிரண்ட் மாஸ்டர்எஸ்.பாண்டியன் அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளான திருமருகல் திருப்பு கலூர், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, வவ்வாலடி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 20 ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை (டேக்வாண்டோ) பயிற்சி அளித்து வருகிறார்.

மேலும் இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் 98, சில்வர் 75,பித்தளை 112 உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியனை ஜாக்கி புக் ஆப் வேல்டு என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.அதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் ஓ.என்.ஜி.சி யின் அதிகாரி சம்பத்குமார், சீனியர் செக்யூரிட்டி மேனேஜர்கள் முரளி கிருஷ்ணன்,அஜய் மாலிக், ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர் பாண்டியனை பாராட்டினர்.

Tags:    

Similar News