நவமால்மருதூர் ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்டு கம்யூ.கட்சியினர் நாற்று நடும் போராட்டம்
- அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
- படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சியில் நீண்ட நாட்க ளாக சாலைகள் சேறும் சகதியமாக குண்டும் குழியு மாக இருந்து வருகிறது மேலும் கிராம அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கள் நாற்று நடும் போரா ட்டம் நடத்த திரண்டனர். தகவல் அறிந்த நாற்று நடும் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் முடிவில் விரைவில் சாலை வசதி, சைடு வாய்க்கால் வசதி, கிராமங்களில் உள்ள சிறு பாலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்ப டும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். அதிகா ரிகளின் பேச்சு வார்த்தை யை தொடர்ந்து தற்காலிக மாக போராட்ட த்தை கை விட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.