உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஏ.பி.மகாபாரதி.

தமிழகத்தில் சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்- கலெக்டர் பேட்டி

Published On 2023-02-06 07:47 GMT   |   Update On 2023-02-06 07:47 GMT
  • மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.
  • மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது மாவட்ட கலெக்டராக ஏ.பி.மகாபாரதி நேற்று பொறு ப்பேற்றுக்கொண்டார்.

புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் பல ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சரும், தலைமைச் செயலாளரும் அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

குறிப்பாக அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் வேகமாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.

தமிழக அரசுக்கு நற்பெயரும் மாவட்ட மக்களுக்கு நன்மையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவேன்.

சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், நீர் வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News