தேனி மாவட்டத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்
- தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- முகாமில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அவர்க ளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யும் சிகிச்சை முறை குறித்து கலெக்டர் பார்வையிட்டு தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில், சுயதொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிட கணினி, கைபேசி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் மற்றும் சக்கர நாற்காலிகள், மின்கல சக்கர நாற்காலிகள்,
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்திய செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.