தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரண பொருட்கள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
- இதன் முதல் கட்டமாக கோவில்பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு உபகரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலை யங்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
உபகரண பொருட்கள்
வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி சார்பில் முதல் கட்டமாக கோவில் பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகா தார நிலையங்களுக்கு உப கரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப் பட்டன.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கணேஷ் நகர் பகுதியில் உள்ள நகர்நல ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் எடை பரிசோதனை எந்திரம், போர்வைகள், நாற்காலிகள், ரத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வைகள் பரிசோத னைக்கான உபகரண பொருட்களை ஆரம்ப சுகா தார மருத்துவ அலுவலர் ஆர்த்தியிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற் செல்வன், பகுதி செய லாளரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், கண்ணன், வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜூடி ஜீவன்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், வட்ட செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சிங்கராஜ், மாநகர மருத்துவ அணி துணைத்தலைவர் மாரிமுத்து, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி பிரதிநிதி சாமுவேல் செல்வராஜ், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.