உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

மருந்து கடைக்காரரை கத்தியால் குத்திய 2 பேர் மீது வழக்கு

Published On 2022-06-13 05:49 GMT   |   Update On 2022-06-13 05:49 GMT
  • போடி திருமலாபுரம் செந்தில்விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ் (70). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • குடிபோதையில் அவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் செந்தில்விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ் (70). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் போடி முனிசிபல் காலனியை சேர்ந்த கண்ணன் மற்றும் வடிவேலு ஆகியோர் குடிபோதையில் வெட்டுகாயத்துக்கு பேண்டேஜ் கேட்டுள்ளனர். அதற்கு விலை அதிகமாக கேட்டதாக கூறி அவர்கள் தம்பிராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.

குறித்த பணத்தை தராவிட்டால் தான் பேண்டேஜ் வழங்க முடியாது என தம்பிராஜ் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் கத்தியால் அவரை சரமாரியாக கீறி கொைல மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News