உள்ளூர் செய்திகள் (District)

மெகா கறி விருந்து திருவிழா

Published On 2023-03-20 10:07 GMT   |   Update On 2023-03-20 10:07 GMT
  • பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டனர்.
  • பலியிட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் இறைச்சிகளைக் கொண்டு கோயில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் 3ம் ஆண்டு மெகா கறி விருந்து திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. பின்னர் கோயில் முன்பு விழாக்குழுவின் சார்பில் 35 ஆடுகளை பலியிட்டனர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டனர். பலியிட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் இறைச்சிகளைக் கொண்டு கோயில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மொய் எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை மகாராஜகடை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News