உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

Published On 2022-06-15 05:30 GMT   |   Update On 2022-06-15 05:30 GMT
  • செந்துறை பகுதிகளில் சிலர் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து செட் போட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
  • தொடர்ந்து கடைகளை–அகற்ற முயன்ற போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செந்துறை :

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை பகுதிகளில் சிலர் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து செட் போட்டு பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளுக்கு தண்டோரா போட்டு அறிவித்தனர்.இதையடுத்து கடைக்காரர்கள் தாங்களா–கவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் கடை ஆக்கிர–மிப்புகளை அகற்றவில்லை.

இதையடுத்து உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், நத்தம் உதவி பொறியாளர் சரவணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நத்தம் போலீஸ்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் செந்துறை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஒரு கடையை இடித்து தள்ளினர்.

தொடர்ந்து கடைகளை–அகற்ற முயன்ற –போது வியாபாரிக–ளுக்கும்அதி–காரி–களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து அதிகாரி–களும் பொது–மக்களும் ஊராட்சி மன்ற தலைவரும் வியாபாரிகளிடம் சமரசம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒத்துழைக்கு–மாறு தெரிவித்தனர்.

நாளை மாலை வரை அவரவர் கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்ற வேண்டும். இல்லை–யென்றால் வெள்ளிக்கிழமை காலையில் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப–டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News