உள்ளூர் செய்திகள்
- பால்குட ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் காயரோ கணசுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மஞ்சள் ஆடையுடன் பால்குடம் சுமந்து வந்த பக்தர்களின் ஊர்வலமானது நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு அம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்து பக்தர்கள் தங்களது தை மாத கடைசி வெள்ளி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.