உள்ளூர் செய்திகள்

லாரியில் இருந்த கொதிகலன் வெடித்து தீப்பற்றி எரிந்ததை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சியில் சாலை பணியின்போது மினி லாரியில் தீ விபத்து: 2 பேர் படுகாயம்

Published On 2023-05-13 06:53 GMT   |   Update On 2023-05-13 06:53 GMT
  • வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது
  • அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மினி லாரியில் வெள்ளை கோடு போடுவதற்கான பவுடர்களை கொதிகலன் மூலம் சூடேற்றும் பணி நடந்தது.  அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரியில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் கொதிகலன் சூடேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்து படுகாயமடைந்த கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே மானப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 48), பாண்டியன் மகன் சுந்தர் (22) ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டபோது லாரியில் இருந்த கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 2- பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News