புதுவையில் இருந்து 1800 லிட்டர் டீசல் கடத்திய மினி லாரி டிரைவர் கைது
- புதுவையில் இருந்து 1800 லிட்டர் டீசல் கடத்திய மினி லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் பிரம்மதேசம் அருகே சொக்கநாததாங்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை தடுப்பு காவல் துறை ஐ.ஜி. காமினி ஆணைக்கிணங்க, சூப்பிரண்டு கீதா உத்தரவிக்கிணங்க, துணை சூப்பிரண்டு மனோகர் மேற்பா ர்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே சொக்கநாததாங்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 11 பேரல்களில் 1800 லிட்டர் டீசல் இருந்தததை கண்டனர். மேலும், இது புதுவை மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து மினி லாரி டிரைவர் ராஜேஷை (வயது 28) கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த டீசல் கல்குவாரிக்கு வாங்கிச் சென்றதும், இந்த மினி லாரியும் கல்குவாரிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து டீசலையும், மினி லாரியையும் பறிமுதல் சய்த போலீசார் கல்குவாரி உரிமையாளர் பிரேமசிவம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.