ஆளுநர் அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் பொன்முடி
- பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
- ஆளுநர் வெளியிட்ட அறிக்கையை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என்றார் அமைச்சர் பொன்முடி.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் வெளியிட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும், துணைவேந்தரை தேர்வு செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.