செஞ்சியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பிறை கொடி ஊர்வலம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
- ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம்
- பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மந்தவெளி பகுதியில் உள்ள ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஹசாத் சையத் இஸ்மாயில் ஷா அவுலியாதர்காவில் பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தர்காவில் மாலை அணிவித்து பாத்தியா நடத்தினர். தொடர்ந்து பிறைகொடி ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,நகர செயலாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்.சந்தனக்கூடுவிழா கமிட்டி நிர்வாகிகள் ஜான் பாஷா, அசாதுல்லா, ஜெ. எஸ். சர்தார், ஷமியுள்ளா, ஷாஜகான், முபாரக், ஹாஜி ஷரீப்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.