உள்ளூர் செய்திகள்

கீரனூர் அணைக் கட்டை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் கீரனூர் அணைக்கட்டை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்

Published On 2023-05-14 07:29 GMT   |   Update On 2023-05-14 07:29 GMT
  • ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறை எடுத்து அணையை விரிவுபடுத்த வேண்டும்.
  • அணையின் கதவை திறந்தபின் அங்குள்ள சிலர் மூடி விடுகிறார்கள்.

விழுப்புரம்:

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் கீரனூர் அணைக்கட்டு பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கீரனூர் அணைக்கட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு அணையின் மேற்கு பகுதியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அதை ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறை எடுத்து அணையை விரிவு படுத்த வேண்டும். அணையின் கதவை திறந்தபின் அங்குள்ள சிலர் மூடி விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அணைக்கு தண்ணீர் வரும் கால்வாயில் இப்பொழுது படித்திருக்கும் மணல், கோரை செடிகளை அகற்ற வேண்டும் .பொது ப்பணி துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்து இந்த ஆண்டு நிதியில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பழைய கோரிக்கையான சாத்தனூர் அணை கால்வாயை நந்தன் கால் வாயுடன் இணைக்க முயற்சி மேற் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இவைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்தார். தொடர்ந்து அவர் அணைக்கட்டு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் உள்ள கோரை புற்களை அகற்றி சரி செய்ய அறிவுறுத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் ராஜாராமன் மற்றும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் சுரேஷ், சேகர், வெற்றி தமிழ்ச்செல்வன், கன்னிகா ரமேஷ் உள்ளி ட்டோர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News