உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்ட கேரம் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சண்.ராமநாதனுக்கு தமிழ்நாடு கேரம் கழகத்தின் தலைவர் நாசர்கான் சான்றிதழை வழங்கினர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேரம் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கை - கேரம் கழக மாநில தலைவர் சண்.ராமநாதன் தகவல்

Published On 2023-01-08 10:39 GMT   |   Update On 2023-01-08 10:39 GMT
  • கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 6 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.
  • தஞ்சையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கேரம் போட்டி நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கேரம் கழகத்தின் தலைவரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் தமிழ்நாடு கேரம் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு கேரம் கழக தலைவர் நாசர்கான், செயலாளர் இருதயம், பொருளாளர் கார்த்திகேயன், மண்டல செயலாளர்கள் மாரியப்பன், சிவக்குமார், சேலம் மாவட்ட கேரம் சங்க செயல் தலைவர் லாரன்ஸ், செயலாளர் டேனியல், தஞ்சை மாவட்ட கேரம் சங்க செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மேயர் சண்.ராமநாதனிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுடெல்லியில் நடந்து முடிந்த 50-வது தேசிய சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 6 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளோடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெறவும், கேரம் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

தஞ்சையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கேரம் போட்டி நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News