உள்ளூர் செய்திகள்

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தவர் 4 நாளுக்கு பிறகு பிணமாக மீட்பு: மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவரை கிணற்றில் வீசியுள்ளதாக தருமபுரி கலெக்டரிடம் உறவினர்கள் பரபரப்பு புகார் மனு

Published On 2022-10-18 09:10 GMT   |   Update On 2022-10-18 09:10 GMT
  • கிணற்றில் காளியம்மாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
  • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சாஸ்திரிமுட்லு கிராமத்தை சேர்ந்த திம்மப்பன்-காளியம்மாள் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளை கள் உள்ளனர். போதிய வசதி இல்லாத காரணத்தால் திம்மப்பன் ஓசூர் பகுதிக்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காளியம்மா வுக்கும் அதிக பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக காளியம்மாள் கணவர் திம்மப்பன் வெளியூருக்கு வேலைக்கு செல்லாமல், உள்ளூரிலேயே இருந்து வந்துள்ளார். அப்போது காளியம்மாவுக்கு இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து, இருவரையும் கண்டித்து உள்ளார்.

இதனால் கடந்த 6 மாத காலமாக காளியம்மாள் குறிப்பிட்ட அந்த நபருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் மது போதையில், திம்மப்பன் வீட்டு அருகே வந்து அந்த ஆசாமி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி இரவு மீண்டும் அவர் திம்மப்பன் வீட்டு அருகே அமர்ந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

சம்பவத்தன்று இரவு காளியம்மாள் தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரம் ஆகியம் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் உறவினர் வீட்டில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கிடைக்காத நிலையில் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து 4 நாட்களுக்கு பிறகு அதே பகுதியில் உள்ள கிணற்றில் காளியம்மாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் காளியம்மாள் நன்றாக நீச்சல் தெரிந்த நிலையில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்று குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வயல்களில் இரவு நேரத்தில் கள்ளத்தனமாக மின்சாரம் பாய்ச்சுவதை அறிந்து அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்துபோ கடலை் தோட்டத்தில் இருந்த மின்கம்பியில் காளியம்மாவின் தலைமுடி சிக்கி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்து மாரண்டள்ளி போலீசிடம் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் திம்மப்பன் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என பல்வேறு இடங்களுக்கு சென்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை களை மேற்கொள்ளப் போவதாகவும் இறந்த காளியம்மாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News