வாக்கு எந்திரத்தில் எக்கச்சக்க குளறுபடி - சென்னையில் பரபரப்பு
- வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் மந்தமாக இருப்பதாக தகவல்.
- முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மத்திய சென்னையில் பல பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் மந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் 6 தொகுதியில் இருந்து பெட்டிகள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்றின் போது வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 12-வது தெருவில் வாக்கு எண்ணும் எந்திரம் பழுதானதால் வேறு எந்திரம் மாற்றப்பட்டதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அதேபோல ஆயிரம்விளக்கு தொகுதி 2-வது சுற்று பணி ஆரம்பிக்கும் போது 4-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்கு எந்திரம் பழுதானது. அதையும் சீர்செய்யும் பணி நடைபெற்றதால் அதேபோன்று காலதாமதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து 3-வது சுற்றில் துறைமுகம் தொகுதியில் 8-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்கு எந்த பழுதானது. சீர் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற மின்னணு பழுது காரணமாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும் வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்றது.
காலை 10 மணிவரை ஒரு சுற்று முடிவு மட்டுமே அறிவிக்க முடிந்தது. ஒவ்வொரு சுற்று முடிவும் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பெயர்பலகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரே 2-வது சுற்று தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.