உள்ளூர் செய்திகள் (District)

ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணியினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் சாந்தி, முன்னிலையில் துவக்கி வைத்தார். அருகில் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, தடங்கம்.பெ.சுப்பிரமணி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் உள்பட பலர் உள்ளனர்.

ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணி

Published On 2023-03-06 09:23 GMT   |   Update On 2023-03-06 09:23 GMT
  • சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற 25-ற்கும் மேலான பல்வேறு பணிகள்.
  • ரூ.1757.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான 3.10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் சாந்தி, முன்னிலையில் துவக்கி வைத்தார்.

ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கை செய்யப்பட்டதை தொடர்ந்து நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணை குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற 25-ற்கும் மேலான பல்வேறு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1757.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான 3.10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் கெம்புராஜ், கூத்தபாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தருமபுரி மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், பென்னாகரம் வட்டாட்சியர் சௌகத்அலி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News