உள்ளூர் செய்திகள்
வண்ணார்பேட்டை ஆற்று பாலத்தில் லாரியில் இருந்து கசிந்த ஆயிலால் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள்
- வண்ணார்பேட்டை ஆற்று பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆயில் கொட்டிக்கிடப்பதை கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.
- போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து தச்சநல்லூர் செல் லும் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தில் இன்று காலை ஆயில் ஏற்றி சென்ற லாரியில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டது.
பாலத்தில் கொட்டிய ஆயில்
இதனால் ஆற்று பாலத்தில் ஆயில் கொட்டி கிடந்தது. இதில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.
ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த ஆயிலில் வழுக்கி கீழே விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப் பட்டது.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்ற சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேர நெருக்கடிக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.