உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தொடரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் மேலும் 1½ அடி உயர்வு

Published On 2023-07-07 06:26 GMT   |   Update On 2023-07-07 06:26 GMT
  • கடந்த 3 நாட்களுக்கு முன்பு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது.
  • நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர்:

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் கடந்த 3 நாட்களாக சாரல்மழையே பெய்து வருகிறது. இருந்தபோதும் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான குமுளி, லோயர்கேம்ப், தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 116.90 அடியாக இருந்த நிலையில் இன்றுகாலை 118.05 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 2605 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 356 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2276 மி.கனஅடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. வரத்து 94 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1988 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாகவும் உள்ளது.

பெரியாறு 27.4, தேக்கடி 25.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதிஅணை 3.2, போடி 1.2, சோத்துப்பாறை 1, வீரபாண்டி 3, அரண்மனைபுதூர் 2.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News