138 அடியை கடந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
- பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 2401 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 4523 கன அடி நீர் வருகிறது.
கூடலூர்:
பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 136 அடியை கடந்த நிலையில் 142 அடியை எட்டுமா என விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர். ஆனால் ரூல்கர்வ் முறைப்படி 10ந் தேதி வரை 142 அடி தேக்க முடியாது.
இதனால் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விட ப்பட்டுள்ளது. இதனால் கேரள பகுதிகளான வல்லக்கடவு, வண்டிபெரி யாறு, சப்பாத் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆற்றங்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று 10 ஷட்டர்கள் மூலம் 2228 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 2401 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 4523 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 138.25 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடிக்கிறது. அணைக்கு 3040 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2761 கன அடி நீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 92 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 133 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்கும் 130 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது.
பெரியாறு 21.4, தேக்கடி 30.8, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.