122 அடியை எட்டும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
- நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2157 கன அடியாக உள்ளது. திறப்பு 1022 கன அடி. இருப்பு 2945 மி.கன அடி.
வைகை அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. நீர்வரத்து 509 கன அடி. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1862 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. அணைக்கு 11 கன அடி நீர் வருகிறது. இருப்பு 405. 22 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 49.43 மி. கன அடியாக உள்ளது.
பெரியாறு 14.2, தேக்கடி 9, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.