உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

நீர்பிடிப்பில் தொடர் மழை 136 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு நீர் மட்டம்

Published On 2023-11-24 07:10 GMT   |   Update On 2023-11-24 07:10 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா விலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
  • கடந்த 2 நாட்களில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா விலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று காலை 4118 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில் 5800 கன அடியாக அதிகரித்தது.

இன்று காலை அணைக்கு 3617 கன அடி நீர் வருகிறது. நேற்று 134.90 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 135.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6068 மி.கன அடியாக உள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூல்கர்வ் அடிப்படையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 67.32 அடியாக உள்ளது. நீர் வரத்து 4583 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பூர்வீக பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் 5899 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5162 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ள ளவை எட்டி 126.93 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 521 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 22-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேகமலை, சுருளி அருவியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு 5.8, தேக்கடி 11.4, கூடலூர் 3.6, உத்தம பாளையம் 2.4, போடி 3.2, வைகை அணை 14, மஞ்ச ளாறு 3, சோத்துப்பாறை 26, பெரியகுளம் 18, வீரபாண்டி 12, அரண்மனைபுதூர் 11 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.


Tags:    

Similar News