உள்ளூர் செய்திகள் (District)

தீ வைத்து எரிக்கப்பட்ட மரம்.

சின்னமனூா் அருகே மயானத்தை ஆக்கிரமிக்க மரத்துக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்

Published On 2023-11-15 04:38 GMT   |   Update On 2023-11-15 04:38 GMT
  • மயானத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர்.
  • இதன் காரணமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

சின்னமனூர்:

சின்னமனூா் அருகே முத்துலாபுரம் ஊராட்சி பரமத்தேவன்பட்டி மயானத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. மயானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ஆலமரத்தை மர்ம நபர்கள் தீ வைத்து அழித்து வருகிறார்கள்.

மயானத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர். இதன் காரணமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பரமத்தேவன்பட்டி கருப்பசாமி கோவில் சாலையிலுள்ள மயான ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் . அதேபோல மயானத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மரத்தை தீ வைத்து அழித்து வரும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News