உள்ளூர் செய்திகள்

40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பொக்லைன் எந்திரம்

Published On 2023-07-17 07:24 GMT   |   Update On 2023-07-17 07:24 GMT
  • சேகர் (வயது 50) இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது.
  • சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சித்ர மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50).

இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது. அதை சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.

பொக்லைன் எந்திரத்தை டிரைவர் சஞ்சீவி என்பவர் இயக்கி, கிணற்றை சுற்றியிருந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றிக் ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பொக்லைன் எந்திரம் விழுந்தது.

அப்போது, டிரைவர் சஞ்சீவி மரக்கிளையை தாவி பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டது.

Tags:    

Similar News