பரமத்திவேலூர் அருகே வாகன தணிக்கை வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம், கார்கள் பறிமுதல்
- திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
- சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்ப டையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில் 2 ஆம்னி வேன்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது கண்ட றியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவல கத்தில் நிறுத்தி வைத்தனர்.
மேலும் 4 ஆண்டுகளாக வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம் மற்றும் தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய ஒரு கனரக வாகனமும் கண்டறியப்பட்டு, ரூ.50 ஆயிரம் வரி செலுத்தவும், ரூ.25 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கவும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்ற வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறினார்.