கிணற்றுக்குள் தவறி விழுந்தகூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
- 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- ரோப்கயிறு வேகமாக சுற்றியதால் அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே வைரம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேக் (33). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில் சித்தாளந்தூரை சேர்ந்த கார்த்திக் (32), நவீன்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதை தொடர்ந்து உணவு சாப்பிட வெளியே செல்லலாம் என டிராக்டர் மூலம் ரோப்பை கட்டி அதன் மூலம் கார்த்திக் மேலே வர முயற்சித்த போது திடீரென ரோப்கயிறு வேகமாக சுற்றியதால், அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.