சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர்: வணிகர்கள் மகாஜன சங்க மாநாட்டில் தீர்மானம்
- வணிகர் தின நிவாரண மாநாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
- 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் மே 5 வணிகர் தின நிவாரண மாநாடு, நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.
மாநாட்டை சங்க அமைப்பாளர் த.பத்மநாபன் துவக்கி வைக்க தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம் வரவேற்புரை நிகழ்த்தினர்.
கடந்த டிசம்பர் மாதம் மழை பெரு வெள்ளம் ஏற்பட்ட போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்காததால் மகாஜன சங்கம் சார்பில் 500 வணிகர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் இந்த மாநாட்டில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சென்னை, தூத்துக்குடி, ஏரல் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 500 வணிகர்களுக்கு தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக் தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
இதில் எம்.என்.ராஜா, கவிஞர் திலகபாமா, தங்கமுத்து, டி.ராஜ்குமார், ஆர்.சுந்தரேஸ்வரன், பயில்வான் ரங்கநாதன், பிரதாப் சந்தர், ஆர்.எஸ்.முத்து, புழல் தர்மராஜ், சத்திரியர் மக்கள் கட்சித் தலைவர் மின்னல் ஸ்டீபன் நாடார், திரவியம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
இதில் கொட்டிவாக்கம் முருகன், சண்முக துரை நாடார், தொழில் அதிபர்கள் எஸ்.ஜெகதீஷ், ரவீந்திரநாதன், சிவக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.
மாநாட்டில் நிர்வாகிகள் சிங்காரம், துரை சுந்தரசேகர், செல்வகுமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், மாரீஸ்வரன், காமராஜ், தங்கதுரை, முருகேசன், நெல்லை டேவிட்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் பொதுச் செயலாளர் ஹாஜி மம்முசா நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி. தொகையில் ஒரு சதவீதத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு அரசுகள் வழங்க வேண்டும். தயாரிப்பு உற்பத்தி பொருட்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வண்டலூர், ஓட்டேரி மருந்து வணிகர் வினோத்குமார் கொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
லூலூ மார்க்கெட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி விடுதலையான வணிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வாடகை கடைகளுக்கு வணிகர்கள் மாநகராட்சி உரிமம் புதுப்பிக்க கடை உரிமையாளரின் வீட்டுவரி செலுத்திய ரசீதை இணைக்க வேண்டும் என்கிற மாநகராட்சி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.