உள்ளூர் செய்திகள்

தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டிகள்

Published On 2023-07-28 09:23 GMT   |   Update On 2023-07-28 09:23 GMT
  • 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
  • போட்டியில் மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தை பிடித்தார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் 2-வது தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தில் 19 சட்டக்கல்லூரிகள் மற்றும் மற்ற மாநிலத்தில் இருந்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியில் ஆந்திர மாநில கே.எல். நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தையும், தமிழக சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவி அநன்யா ஸ்ரீ 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

  முதல் பரிசு பெற்ற மாணவி கிருஷ்ண நிகிதாவிற்கு ரொக்க பரிசு 10 ஆயிரத்தையும், 2-ம் பரிசு பெற்ற மாணவி அநன்யா ஸ்ரீக்கு ரொக்க பரிசாக 5 ஆயிரத்தையும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வழங்கினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News