தேசிய அளவிலான 'ட்ராக் சைக்கிளிங்' போட்டி- உதயநிதி தொடங்கி வைத்தார்
- 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
- தாரா சுதாகர், மகாலட்சுமி ராஜாராம், புதுப்பாக்கம் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்:
வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான ட்ராக் சைக்கிளிங் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
19-ந்தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல். இதயவர்மன், ஒன்றிய குழு துணை தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், மேலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ், அருண்குமார்.
திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி எல்லப்பன், தாரா சுதாகர், மகாலட்சுமி ராஜாராம், புதுப்பாக்கம் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் தலைமையில் மேலக்கோட்டையூர் எல்லையில் இருந்து பூக்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.