உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பாளை சாரதா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Published On 2023-08-10 09:12 GMT   |   Update On 2023-08-10 09:12 GMT
  • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் “பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
  • கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

நெல்லை:

பாளை சாரதா மகளிர் கல்லூரியில் "பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மதுரை பெஞ்ச் முதல்வர் ஸ்ரீ.எம். சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மற்றும் சமூக பணித்துறைத் தலைவர் வேலுசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி உயிரியல் துறை இணைப்பேராசிரியர் அருண் நாகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பிரிவின் இணைப்பேராசிரியர் ஹேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

கருத்தரங்கிற்கு 9 கல்லூரிகளில் இருந்து பேரா சிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு 129 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். முடிவில் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆறுமுக செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News