உள்ளூர் செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

Published On 2023-05-05 08:55 GMT   |   Update On 2023-05-05 08:55 GMT
  • ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் லட்சுமிநாராயணன் பயிற்சி வழங்கினார்.
  • பயிற்சி பட்டறையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண்-61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு நிதியுதவியுடன் 'மருத்துவ சேவையில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை கடந்த 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மஞ்சித் வரவேற்று பேசினார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியருமான லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். துறைத்தலைவர் பெனோ வாழ்த்தி பேசினார்.

இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News