உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே சத்துணவில் முட்டை வழங்கப்படாததால் மாணவ,மாணவிகள் ஏமாற்றம்

Published On 2022-09-12 09:32 GMT   |   Update On 2022-09-12 09:32 GMT
  • கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
  • மழை காரணமாக அவரால் விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கடம்பக்குடி பஞ்சாயத்தில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இருளர் இனத்தை சேர்ந்த 5 மாணவிகள்,4மாணவர்கள் உள்பட 9 பேர் பயின்று வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் இப்பள்ளிக்கென சத்துணவு சமைக்கும் பணியாளர் இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் அப்பள்ளியில் பயிலும் மனைவி ஒருவரின் தாயான தெய்வானை என்பவர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து இப்பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் தேவராஜம்மா என்பவர் கூறுகையில் , அப்பள்ளிக்கு முட்டை விநியோகிக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் மழை காரணமாக அவரால் விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி தங்கு தடையின்றி முட்டைகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் இந்த பள்ளியில் தற்காலிகமாக சமையல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியருக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News