செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி: மாணவர்கள் போராட்டம்
- செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்று விப்பதற்காக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை பயிற்றுவிக்கின்றனர் மேலும் தலைமை ஆசிரியர் 6மாத காலமாக இல்லை எனவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும், உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.