பாலக்கோடு அருகே ரெயில்வே கேட் மேனை தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
- பாலக்கோடு அருகே கேட் மேன் தாக்கப்பட்டார்.
- தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் நாகராஜன் (56) பாலக்கோடு அருகே தளவாய்பட்டி ரெயில்வே கேட்டில் கேட்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை தருமபுரியில் இருந்து பயணிகள் ரயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இதை தொடர்ந்து தளவாய்பட்டி ெரயில்வே கேட்டில் பணியில் இருந்த நாகராஜன் கேட்டை பூட்டினார்.
இதனால் ரயில் செல்லும் வரை வாகனங்கள் காத்திருந்தன. அங்குவந்த 3 வாலிபர்கள் உடனடியாக செல்ல வேண்டும் எனக் கூறி கேட்டை திறந்து விடுமாறு கேட்டனர். ஆனால் கேட்மேன் ரயில் வருவதாகவும் அதற்கான சிக்னல் கிடைத்துள்ளது எனவே கேட்டை திறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் 3 வாலிபர்களும் கேட் மேனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு நாகராஜனை தாக்கியுள்ளனர். இதில் காயம்மடைந்த நாகராஜன் பாலகோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து நாகராஜன் தருமபுரி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல்(39), சரவணன் மகன் கார்த்தி (வயது28), பொன்வயல் நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன் மகன் சின்னசாமி (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.