உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே கோவில் உண்டியல் பிரச்சினையால் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-08-15 07:17 GMT   |   Update On 2022-08-15 07:17 GMT
  • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
  • ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள தையூர் என்ற கிராமத்தில் வேம்பியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை நேற்று மதியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஏற்கனவே தாங்கள் தான் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் அதனால் நாங்கள் உண்டியலை திறந்து எடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தாங்கள்தான் கோவிலை நிர்வகித்து வருவதாகவும் தாங்கள் போட்ட பூட்டை தென்னரசு தரப்பினர் உடைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் மேற்படி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தற்போதைய தலைவர் திருமுருகன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு திருமுருகன் தரப்பினர் சாலை மறியலை கைவிட்டனர்.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News