உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே:தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

Published On 2023-11-16 07:20 GMT   |   Update On 2023-11-16 07:20 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்லமுத்து (வயது 35). கடந்த 12-ந் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி (20) உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது குறித்து தட்டி கேட்ட அண்ணாமலை என்பவரை பூபதி தரப்பினர் தாக்கியுள்ளனர்.

இதை தடுக்கச் சென்ற செல்லமுத்து மற்றும் சிலரை பூபதி தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூபதி, கண்ணு மகன் சுப்ரமணியன், ஏழுமலை மகன் வெங்கடேசன், வேலு மகன் கோவிந்தராஜ் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.

Tags:    

Similar News