நீலகிரியில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடக்கம்
- 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
- கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்கான அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். திராவிட தமிழர் கட்சி செயலாளர் வெண்மணி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக
நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில்ரவி, காந்தல்ரவி, செந்தில்நாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, முரளிதரன், பத்மநாபன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், அசார்கான், சந்திரகுமார், மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, மேத்யூஸ், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பவீஷ் நன்றி கூறினார்.