உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரிவிதிப்புகள் குறித்து உதவி இயக்குனர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.அருகில் தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் அண்ணாதுரை உள்ளனர்.

விக்கிரவாண்டிபேரூராட்சியில் புதிய வரிவிதிப்பு உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

Published On 2022-07-17 07:27 GMT   |   Update On 2022-07-17 07:27 GMT
  • விக்கிரவாண்டிபேரூராட்சியில் புதிய வரிவிதிப்பு உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
  • அனைத்து கடை ,மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி பேரூராட்சியில் தமிழக அரசின் புதிய வரி விதிப்பு அமல்படுத்த அனைத்து கடை ,மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர். இந்த பணியை கடலுார் மண்டலபேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் திடீர் ஆய்வு செய்து அளவீடுகளையும், வரிகளையும்சரிபார்த்தார். ஆய்வின்போது பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் அண்ணாதுரை , இளநிலை உதவியாளர் ராஜேஷ்,வரி தண்டலர்கள் தண்டபாணி,ஜெயசீலி,கலைவாணி , துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன்,மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News